Addendum-Divisiveness in the name of Dharma

Anti-hindu activities and defamation by Sandhya Jain and Radha Rajan of Acharyas and others

Their attempt to divide the Hindu Acharyas is clear from the Tamil circular doing the rounds.

The names of Swamijis mentioned in the Tamil circular (appended) are as follows:

Kanchi Acharya Sri Jayendra Saraswati
Udupi Matham Sri Pejawar Sri Visweswara Teertha Swami
Tiruvadudurai Adheenam 23rd sannidhanam Seervalar Seer Sivaprakasa Desaka Paramacharya Swami
Dharmapuram Adheenam Srilasri Shanmukha desika jnanasambandha paramacharya Swami
Tiruppanandal Adheenam Kasivaasi kasi madam ejaman srilasri muthukumaraswamy Tambiran Swami
Srirangam Ahobila Matham Sri Azhagiya Singar Jeer Swami
Srimat Pundareekapuram Ashramam Sri Andavan Swami
Sri Vaanamaamalai matham ramanuja Jeer Srimad Paramahamsa Jagadguru Sri Kalyana Vaanamaamalai Swami
Peetadhipati Sri Bhuvaneswari Avadhoota Peetham Pudukkottai Pujya Sri Omkarananda Brahmendra Saraswati

Circular in Tamil (prepared by unnamed Bhaktas Group)

ஹிந்து தர்ம பாதுகாப்பு இயக்கம்

பூஜைக்குறிய ஆசார்யார்கள் / குருமகாசன்னிதானங்கள் / ஸ்வாமிகள்
அனைவருக்கும்

திருக்கோயில் பக்தர் பேரவையைச் சேர்ந்த எங்கள் அனைவரின்
அனேக கோடி நமஸ்காரங்கள்.

பூஜைக்குறிய துறவிகள், குருக்கள் மற்றும் ஆசார்யார்கள் ஆகியோரின் பரிபூரண அனுக்ரஹத்துடன், சிறிய பக்தர்கள் குழுவினரான நாங்கள், பல்வேறுபட்ட சம்பிரதாயங்களைச் சேர்ந்த பீடாதிபதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் துறவிகளை, ஹிந்து தர்மத்தின் பாதுகாப்பிற்காகவும் பொது மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டியும், ஒரே இடத்தில் வரவேற்று ஒன்றாகப் பொது மேடையில்  வீற்றிருக்கச் செய்யும் உயர்ந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்யார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள், திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 23-வது குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசார்ய ஸ்வாமிகள், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய  ஸ்வாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி காசி மடம் எஜமான் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி தம்பிரான் ஸ்வாமிகள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ அஹோபில மடம் ஸ்ரீ அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீமத் புண்டரீகபுரம் ஆஸ்ரமம் ஸ்ரீ ஆண்டவன் ஸ்வாமிகள், ஸ்ரீ வானமாமலை மடம் ராமானுஜ ஜீயர் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஜகத்குரு ஸ்ரீ கல்யாண வானமாமலை ஸ்வாமிகள், பீடாதிபதி ஸ்ரீ புவனேஸ்வரி அவதூத  பீடம் புதுக்கோட்டை பூஜ்ய ஸ்ரீ ஓம்காராநந்த பிரம்மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் உள்ளிட்ட பல பீடாதிபதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும், அறிவுரையின் பேரிலும், பக்தர் குழுவாகிய நாங்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் துறவிகளின் ஒருங்கிணைந்த மாநாடுகளைத் தொடர்ந்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளோம்.

நடக்கவிருக்கும் தொடர் மாநாடுகளின் முக்கிய நோக்கமானது, கீழ்காணும் மூன்று விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஹிந்து பக்தர்களுக்கு ஏற்படுத்துவதாகும்.

1. பரவலாகவும் வேகமாகவும் நடைபெறும் கிறுத்துவ மற்றும் இஸ்லாமிய மதமாற்றங்கள்
2. கிறுத்துவ மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களுக்கும், அரசு சாரா அமைப்புகளுக்கும், முறையே கிறுத்துவ மற்றும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் கணக்கிலடங்கா பெருமளவிலான நிதியுதவிகள்
3. ஹிந்து ஆலயங்களையும், மடங்களையும், நிறுவனங்களையும், அமைப்புகளையும் சீராக நிர்வகிக்கத் தேவையான ஒரு சுயாட்சி உரிமை கொண்ட மன்றத்தை அமைத்தல்

தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு தென் மாநிலங்களிலும், தங்களின் ஜனத்தொகைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல், பெருவாரியான நிலங்களைக் கைப்பற்றுவதிலும், சர்ச்சுகள் மற்றும் மசூதிகள் கட்டுவதிலும், பொதுவிடங்களைப் பெரிதும் ஆக்கிரமித்துத் தங்களின் மதச்சின்னங்களை பிரம்மாண்டமாக நிறுத்துவதிலும், மேலும் பெருமளவில் மதமாற்றங்கள் புரிவதிலும்,  கிறுத்துவ மற்றும் இஸ்லாமிய மத நிறுவனங்கள் கடுமையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும், ஊரிலும், மாவட்டத்திலும், அவர்களின் ஜனத்தொகைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல் சர்ச்சுகள் மற்றும் மசூதிகள் கட்டப்பட்டுப் பெருகி வருகின்றன.

நான்கு தென்மாநிலங்களிலும், பள்ளிகள், கலைக்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கட்டும் போர்வையில், விளை நிலங்களையும், வேளாண்மை நிலங்களையும், மற்ற பல மானாவாரி நிலங்களையும் கையகப் படுத்துவதில் இரண்டு மதத்தவர்களும் முனைந்து செயல்படுகின்றனர். கிறுத்துவர்களும், இஸ்லாமியர்களும், காய்கறி-பழம், மளிகை, துணி, இரும்பு-சிமெண்ட்,
 தங்கம்-வெள்ளி நகைகள் ஆகிய வியாபாரங்களையும், மற்றும் சூப்பர் மார்கெட்கள், பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள், கடனளிக்கும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றையும் பெரிதும் கையகப் படுத்தி வருகிறார்கள்.

இஸ்லாமிய மற்றும் கிறுத்துவ மதமாற்றமானது நம் ஹிந்து சமூகத்தைப் புற்றுநோய் போல தாக்கிப் பரவி வருகின்றது. கடலோரம் உள்ள கிராமங்களையும், மீனவர் குப்பங்களையும் கிட்டத்தட்ட முழுவதுமாக கிறுத்துவர்களிடமும் இஸ்லாமியர்களிடமும் இழந்துவிட்டோம். உள்நாட்டுப் பகுதிகளிலும் பல கிராமங்கள் முழுமையாக மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த இரு மதநிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து வரும் கணக்கிலடங்கா பெருமளவிலான நிதியுதவிகள் மூலமாகத் தான் மேற்கண்டவை சாத்தியப் படுகின்றன. பெருமளவில் நிதியுதவிகள் வருவதும், அவை மதமாற்றங்களுக்கு உபயோகப் படுத்தப்படுவதும், மத்திய மாநில அரசுகளுக்குத் தெரிந்தே நடக்கின்றன. இரு மத நிறுவனங்களும் நிலங்கள் கையகப் படுத்துவதற்கும், சர்ச்சுகள் மற்றும்
 மசூதிகள் கட்டுவதற்கும், மதமாற்றங்களில் ஈடுபடுவதற்கும், மத்திய மாநில அரசுகள் கண்ணிருந்தும் குருடர்களாக அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், ஒரே காரணம் ஹிந்துக்களின் ஒற்றுமையின்மை தான்.

ஹிந்துக்களிடையே இருக்கும் ஜாதி வேற்றுமைகளும், சைவ வைணவ பேதங்களும், ஹிந்து தர்மத்திற்கும் ஹிந்து பக்தர்களுக்கும் ஆபத்து நேரும்போது கூட நாம் ஒன்றிணைந்து செயல்படாமல் இருப்பதும், அன்னிய மதத்தவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருப்பதால், அவர்கள் நம் ஆலயங்களின் வாசல்களிலேயே கூடத் தங்கள் மதப்பிரசாரங்களைத் துணிந்து செய்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்று திரண்டு
 அவர்களை எதிர்கொள்ளாத காரணத்தால், அவர்கள் வேண்டுமென்றே நம் ஆலயங்கள் மற்றும் மடங்கள் அருகிலெல்லாம் தங்கள் சர்ச்சுகளையும் மசூதிகளையும் கட்டிவருகிறார்கள்.

கிறுத்துவர்களும் இஸ்லாமியர்களும், வைணவ ஆலயங்கள் என்றோ அல்லது சைவ ஆலயங்கள் என்றோ, வைணவ பக்தர்கள் என்றோ அல்லது சைவ பக்தர்கள் என்றோ குறிவைத்து இயங்குவதில்லை. அவர்கள் ஹிந்து ஆலயங்கள் ஹிந்து பக்தர்கள் என்று தான் குறிவைத்து இயங்குகிறார்கள். கன்யாகுமரி, நாகர்கோவில், திண்டுக்கல், திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களும், உதகை,
 கொடைக்கானல், கொல்லிமலை போன்ற மலைப்பிரதேசங்களும், மேல்விஷாரம், தேரெழுந்தூர், அச்சிறுபாக்கம் போன்ற ஊர்களும் தற்போது இருக்கும் நிலையில் நமக்குப் பயங்கரமான எச்சரிக்கை தருகின்றன. நாம் இனியும் ஒன்று சேராமல் ஜாதி வேற்றுமைகளிலும், சைவ வைணவ பேதங்களிலும் உழன்று கொண்டிருந்தோமானால், நமது ஒற்றுமையின்மையினால் ஏற்பட்டுள்ள பரவலான வெற்றிடங்களை கிறுத்துவமும்  இஸ்லாமும் வெகு சுலபமாக நிரப்பிவிடும் அபாயம் நம் கண் முன் நிற்கிறது. உண்மையில் சொல்லப்போனால், நம் ஒற்றுமையின்மையினால் ஏற்பட்ட வெற்றிடங்களை, அவர்கள் நிரப்புவதை இன்று நாம் காணத் தொடங்கிவிட்டோம் என்பதே நிதர்சனம்.

இஸ்லாம் மற்றும் கிறுத்துவ மதங்கள் ஏற்படுத்தும் மாபெரும் அழிவிலிருந்து நம் சொந்த பூமியையும், ஆலயங்கள், மடங்கள், மற்றும் ஜீவசமாதிகள் ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டுமானால், நம் ஹிந்து சமுதாயம் விழித்து, ஒன்றுபட்டு, வீறுகொண்டு எழவேண்டும். ஒற்றுமையுடன் கூடிய ஒரு மாபெரும் சக்தியாக ஹிந்து சமுதாயத்தை எழுப்பக்கூடிய திறமை ஹிந்து மதத் தலைவர்களான
 ஆசார்யார்களிடமும், குருமார்களிடமும், மடாதிபதிகள் மற்றும் ஆதீனங்களிடமும் மட்டுமே இருக்கின்றது.

மேலே குறிப்பிடப்பட்ட மதத் தலைவர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் அவர்களின் உத்தரவின் படி, முதல் துறவிகள் மாநாடு வரவிருக்கும் விக்ருதி வருடம், சித்திரை (மேஷ) மாதம், 5-ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி 2010) அன்று திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூஜைக்குறிய துறவிகள், ஆசார்யார்கள், குருசன்னிதானங்கள், ஸ்வாமிகள் அனைவரும் முதல் நாள் (ஏப்ரல்
 17-ஆம் தேதி) அன்று மாலையே திண்டுக்கலில் எழுந்தருளுமாறு பிரார்த்திக்கின்றோம்.

இஸ்லாமியர் மற்றும் கிறுத்துவர் மிகவும் பலத்துடன் இருக்கும் மாவட்டங்களில் திண்டுக்கலும் ஒன்று. எந்த விதமான சம்பிரதாயத்தைச் சேர்ந்த மடமோ, ஆதீனமோ, ஆஸ்ரமமோ அங்கு இல்லாததே இதற்குக் காரணம். இந்த உண்மை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் துறவி மாநாட்டிற்குத் திண்டுக்கல் தேர்வு செய்யப்பட்டது, மாநாட்டின் முடிவில் அங்கு ஒரு மடமோ, ஆதீனமோ, ஆஸ்ரமமோ
 ஸ்தாபிக்கலாம் என்கிற எண்ணத்தில் தான். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து பக்தர்களின் நெடுநாளைய பிரார்த்தனையும் இது தான்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று முக்கிய குறிக்கோள்கள் தவிர, திண்டுக்கல் பத்மகிரி மலையில் உள்ள ஆலயத்திலிருந்து 200 வருடங்களுக்கு முன்னர் 18-ஆம் நூற்றாண்டில் நீக்கப்பட்ட பத்மகிரீஸ்வரர் மற்றும் அபிராமி அம்பாள் விக்ரஹங்களை மீண்டும் பிரதிஷ்டை செய்வதும், கும்பாபிஷேகம் நடத்துவதும், பத்மகிரியைச் சுற்றி பக்தர்கள் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பெருமளவில் திரண்டு
 வந்து கிரிவலம் செல்வதற்கும் ஏற்பாடு செய்வதும் ஆகிய முக்கியமான பிரதானமான குறிக்கோளும் உள்ளது.

பத்மகிரி புராணத்தின் படி, மஹரிஷி அகஸ்தியர் இம்மலையில் இருந்து தான் பகவான் பரமேஸ்வரன் பார்வவதி தேவி ஆகியோரின் திருமணக் கோலத்தைக் காட்சியாகக் கண்டு அவர்களின் அருள் பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் இம்மலை கைலாயம் போலிருப்பதாலும் இதைத் தென்கைலாயம் என்று அழைத்தல் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று திண்டுக்கல் பக்தர்கள் கருதுகின்றனர்.

நீக்கப்பட்ட இரு விக்ரஹங்களும் கீழேயுள்ள ஞானாம்பாள் சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த பல வருடங்களாக பக்தர்களால் வழிபடப்படுகின்றன. காளஹ்ஸ்தீஸ்வரர் கோவில் “அபிராமி கோவில்” என்றே தற்போது அழைக்கப் படுகின்றது. பத்மகிரி மலை மேல் உள்ள ஆலயம் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மிகவும் நன்றாகப்
 பாதுகாக்கப் பட்டு வருகின்றது. எனவே பத்மகிரீஸ்வரர் மற்றும் அபிராமி விகரஹங்களைப் பிரதிஷ்டை செய்தாலே கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்கலாம்.

பத்மகிரி மலையின் அடிவாரத்தில் கிரிவலப் பாதை முழுவதிலும் சர்ச்சுகளும் கிறுத்துவ மயானங்களும் கட்டப்பட்டுள்ளன. அடிவாரத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் கிறுத்துவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாம் போர்க்கால அடிப்படையில் மலை மேல் உள்ள கோவிலை புனருத்தாரணம் செய்யவில்லையென்றால், அச்சிறுபாக்கம் மலையைக் கையகப்படுத்தியது போல கிறுத்துவர்கள் பத்மகிரி
 மலையையும் கைப்பற்றி அங்கே பெரிய சர்ச்சு ஒன்றைக் கட்டிவிடுவார்கள். மாபெரும் சிலுவையையும், ஏசு சிலையையும் கூட அமைத்து விடுவார்கள்.

ஆகவே, பக்தர்களாகிய எங்களின் பிரார்த்தனைக்கு இணங்கி, திண்டுக்கல் மாநாட்டிற்கு வருகை புரிந்து, ஹிந்து பக்தர்கள் தங்கள் தர்மத்தையும், சொந்த பூமியையும், ஆலயங்களையும் பாதுகாக்கும் அளவிற்குச் சக்தியும் பலமும் பெறவேண்டுமாய் ஆசீர்வதித்து, அனுக்ரஹம் செய்து அருள் பாலிக்குமாறு மனமுருகி வேண்டிக்கொண்டு எங்கள் பிரார்த்தனையைத் தங்கள் திருவடிகளில்
 சமர்ப்பிக்கின்றோம்.

எப்போதும் துறவிகளின் சேவையில்

பக்தர் குழு
ஹிந்து தர்ம பாதுகாப்பு இயக்கம்.

More posts by this author:

Please follow and like us:

Co Authors :

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.